Wednesday, August 22, 2012

எங்கள் இந்தியா .....INDIA TODAY

எங்கள் இந்தியா .....ஏழைகள் பரம ஏழைகளாகவும் பணமுதலைகள் பரம்பரை பணக்காரர்களாகும் இடம்
வேற்றும்யில் ஒற்றுமை என வேசம் போடும் தேசம்
ஏமாற்றும் எத்தர்களும்
ஏமாளி மக்களும்
நடமாடும் நாடு
தான் வாழ பிறரை வேட்டையாடுமிடம் காடு
தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் இடமே நாடு
எனவே இது ஹோமோ சேப்பியன்ஸ் வாழும் காடு

 

தேச பக்தி என்பார்
விலைக்கு அதை விற்பார்
மத பக்தி என்பார்
மலிவாய் அதையும் விற்பார்
மொழி இனம் என்பார்
தம் குடும்பம் வாழ அதை அழிப்பார்
எல்லாம் இங்கு பொய் பொய்
சுயநலம் ஒன்றே மெய் மெய்
சிலர் கொள்ளையடித்து தலைவர்களாகிறார்கள்
சிலரோ தலைவனாகி கொள்ளையடிக்கிறார்கள்

இளைஞனே யோசி
உன் எதிர்காலம் சில மதிகெட்ட தலைவர்கள் கையில் ?
வீணாய் போகலாமா ...
மாத்தி யோசி ..மாற்ற யோசி
மாற்றங்களை உருவாக்கு ...
உனது மாற்றம் தான்
தலைவர்களை மாற்றும் -அது
உன் தலைவிதியை மாற்றும் ....

Sunday, May 13, 2012

நல்லவனும் வாழ்கிறான் ..

நல்லவனும் வாழ்கிறான்

கெட்டவனும் வாழ்கிறான்

வல்லவன் வாழ்வாங்கு வாழ்கிறான்  


அம்மா ....


கருவாக்கி உயிர்தந்து
உருவாக்கி உடல்தந்து
உணவூட்டி நல்லுனர்வூட்டி
சீராட்டி தாலாட்டி பாராட்டி
அன்பு  பண்பு ஊட்டி
அறிவும் பரிவும் தந்து
ஊக்கமும் ஆக்கமும் அளித்து
அனைத்திலும் வளர்ந்து பெருக
எந்த எதிர்பார்ப்புமின்றி
மழலையின் முன்னேற்றத்தில்
மகிழ்ச்சி காணும் மாபெரும்
மனம் படைத்த
வாழும் தெய்வம்
வாழ்க வாழ்க ...

Saturday, March 3, 2012

அவர்கள் போர்குற்றவாளிகள் அல்ல -ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

 கொலைகாரர்களை காட்டிகொடுக்கமாட்டோம்
அவர்களை காட்டிகொடுத்தால் நாங்களும் அல்லவா மாட்டிகொள்வோம்
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் போர்குற்றவாளிகள் அல்ல
அவர்கள் போர்குற்றவாளிகள் என்றால் நாங்கள்  ?
 ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் செய்தது இனப்படுகொலை அல்ல 
அவர்கள் செய்தது இனப்படுகொலை என்றால் நாங்கள் செய்தது ?நாங்கள் செய்வது ?
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் செய்தது மனித உரிமை மீறல் அல்ல
 அவர்கள் செய்தது மனித உரிமை மீறல் என்றால் நாங்கள் செய்தது ?
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் கொலைகாரர்கள் அல்ல ..மிக நல்லவர்கள்
அப்படி நாங்கள் சொல்லவில்லை என்றால்
அவர்கள்  எங்களை மாட்டிவிட்டு விடுவார்கள்-இல்லாவிட்டால்
எங்கள் எதிரியோடு சேர்ந்து விடுவார்கள்

நாங்கள் நல்லவர்கள் அல்ல
நல்லவர் போல் நடிப்பவர்கள்
எந்தவொரு இனத்தின் உணர்வையும் மதிக்காத
இறையாண்மை பேசும் இழியவர்கள்
 இப்படிக்கு
இந்தீயன்

படுகொலை செய்தவன் குற்றவாளி ..அதோடு
அப்படுகொலைக்கு உதவியவனும் குற்றவாளி அல்லவா-பயில்வான்