Wednesday, June 8, 2011

நன்றாய் நாமும் வாழ்வோம்....

வந்து  விட்டு வாளாவிருந்து விட்டு
வெந்ததை தின்றுவிட்டு வெறுமையாய் இருந்துவிட்டு
சோம்பி திரிந்து விட்டு சோகம் என்றிருந்து
சுகத்தை இழந்து விட்டு விரக்தியில் வீழ்ந்து விடாமல்

பிடித்த செயல்புரிந்து உழைப்பை உற்சாகம்கொண்டு
உயர்வாய் மாற்றிகொண்டு மகிழ்ச்சி  எழுச்சி கொண்டு
தொடர்ந்து முன்னேறிக்கொண்டு சமுகமுன்னேற்றம்
கண்டு வளமும் நலமும் சேர்த்து
நன்றாய் நாமும் வாழ்வோம்.


Tuesday, June 7, 2011

மண்ணும் மனிதனும்



மண்ணிலே பலவகை உண்டு

செம்மண்,கரிசல்மண், வண்டல்மண்... என்று

ஓவொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. ஏனெனில் ஒவ்வொரு மண்ணும் ஒருவகையான தாதுக்களையும் சத்துக்களையும் கொண்டது. அதற்க்கேற்ப தனிச்சிறப்புமிக்க தாவரங்களை வளர்க்கும் சக்தி கொண்டது. எடுத்துகாட்டாக எலுமிச்சை ஒருமண்ணிலும், நெற்பயிர் ஒருமண்ணிலும் பனை ஒருமண்ணிலும் சிறப்பாக  வளர்ந்து பலன் தரும். இந்த மண்வகைகளில் பயன்பாடுகளில் வேறுபாடு இருக்கிறது.ஆனால் ஒவ்வொன்றும் எதோ ஒரு சிறப்பான பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.ஒருவிதமண்ணிலே பல்வேறுவிதமான உயிர்கள் பலுகி பெருகுகிறது.எனினும் ஒருமண்வகை ஒருவகையான உயிர்களை திறம்பட வளர்கின்றன.

தொடர்ந்து பலன் தந்த மண்ணில் சிறிது மகசூல் குறைந்தால் உரம் என்ற பெயரில் வேதிப்பொருட்களை வீச நமக்கு சொல்லிதரப்பட்டிருக்கிறது. மண்ணில் சத்து இல்லை என்று வேதிப்பொருட்களை அள்ளி விதைப்பதால் என்ன ஆகும் மண் கெட்டு போகும். வீரியமின்மைக்கு மாத்திரை சாப்பிட்ட மனிதன் நலமிழந்து போவது போல. ஆனால் அது விளைவித்த தாவரம் இறந்தால் அதையே அது நல்ல உரமாக எடுத்து கொண்டு மீண்டும் திறன்மிக்க தாவரங்களை வளர்க்கும்.பெரும்பலன் தரும்.

இவ்வாறு அம்மண்ணில் விளைந்த செடியோ மரமோ உரமாகி மீண்டும் பல் உயிர்களை வாழ வளர செய்கிறது. தாவரங்களின் தற்கொடை அதன் சந்ததியை திறம்பட உருவாக்கி வளர்க்கிறது. 

இம்மண்னுடன் மனிதனை ஒப்பிட்டுபார்ப்போம் .

மண்போல மனிதனிலும் பலவகை உண்டு.இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு வகையான மண்ணில் வாழ்பவரும் உடலமைப்பு குணாதிசயம் மற்றும் பலவற்றில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா வகையான மனிதனுக்குள்ளும் எதோ ஒன்றை உருவாகும், செயல்படுத்தும் பயனுள்ள ஆற்றல் இயற்கையிலே அமைந்திருக்கிறது. அதை புரிந்து கொண்டு,கண்டுணர்ந்து சரியானமுறையில் வெளிக்கொணர்ந்து விட்டால் அவ்வளவுதான் அது செயற்கரிய செயலயும்செய்து முடிக்குமென்பது நன்குணர்ந்த உண்மையாகும்.

எனவே கருப்பு சிவப்பு மாநிறம் என்றோ ஒல்லி குண்டு உயரம் குட்டை என்றோ அதிமேதாவி மேதாவி முட்டாள் என்றோ ஏழை பணக்காரன் நடுத்தரமானவன் என்றோ நான் அவன்(ள)ஐ விட பெரியவன் சின்னவன் என்றோ ஒப்பிடுவதிலோ வேறுபடுத்துவதிலோ எதுவும் பெரிதாய் விளைந்திட போவதில்லை யாருக்கோ ஒருவருக்கு மனகுடச்சலைதவிர.

அந்த வேலையை செய்பவன் சிறப்பானவன் என்றோ ..இந்தவேலைய செய்பவன் இழிவானவன் என்றோ எண்ணுவது உண்மைக்கு புறம்பானது.ஏனென்றால் எல்லா பணிகளும் தனித்துவம்மிக்கவை.பண்ணும்  பணத்தை வைத்து பணியின் மதிப்பை எடை போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. பணத்துக்காக உழைப்பது  மட்டுமே இன்றைய வாழ்வின் நிலையாகிவிட்டது.உழைப்பது உயர்வதற்கே என்பதை பணத்தில் உயர்வதை  மட்டுமே புரிந்துள்ளது இச்சமுதாயம்.ஆனால் உழைப்பதேனும் செயல் பணத்தில் உயர்வதற்கு மட்டுமல்ல உள்ளம் களித்து மேம்பாடு அடைவதற்க்குமே.
எனவே படித்த படிப்புக்கும் அதனால்கிடைத்த பணிக்கும் அதில் ஆர்வமின்றி உழைத்தால் கிடைத்த பணத்துக்கும் வாழ்கையை பலிகொடுத்து விட்டு புலம்பாமல் வாழ்வை தனக்கு பிடித்த  பாணியில் பிடித்த பணியில் உளமார ஈடுபட்டு உழைத்து உளம் களித்து உயர்வதே சிறப்பாகும். 

ஏனென்றால் எல்லா உயிர்களும் தனிதுவம்மிக்கது.

தன்னுயரம் தன்சிறப்பு உணர்வது மனிதனின் தனிச்சிறப்பு .

தன தனித்தன்மை தனித்திறமை கண்டு அதை உணர்ந்து வெளிக்கொணர்ந்து வளர்த்தால் இயற்கையை  நேசித்து நடந்தால் வானுயர வளர்ந்தோங்கலாம் .செழிப்பாய் வாழ்ந்து செம்மையான வையகத்தை உருவாக்கலாம்.   

Thursday, June 2, 2011

குடிகாரன்(ள்)-தண்ணியை அடித்து தன்னை மறப்பவன்




சும்மா எப்போதாவது என ஆரம்பித்து
எப்போதும் தண்ணியிலே உழல்பவன்
பெருமைக்கு குடித்து சிறுமை அடைபவன்
போட்டி போட்டு குடித்து வந்தி எடுப்பவன்
நிறைய குடிப்பதை பெருமையாய் பேசுபவன்
தண்ணியேஊத்தாமல் குடிப்பதை தைரியம் என்பவன்
கஷ்டத்தை காரணம் காட்டி நஷ்டத்தை அடைபவன்
கவலையை மறக்க என்று ஆரம்பித்து கண்ணீரிலே வாழ்பவன்
தண்ணியை அடித்துவிட்டு பிறரிடம் உளறிவிட்டு
செமத்தியாய் வாங்கிவிட்டு குப்புற விழுந்து தன்னையே மறப்பவன்
தான் தெருவிலே விழுந்து குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வருபவன்
இவனின் மறுபெயர் 'தண்ணி அடிப்பவன்'
தண்ணி ஊத்தி தண்ணி அடிப்பதாலா -இல்லை
தண்ணியே ஊத்தாமல் தண்ணி அடிப்பதாலா
இன்னொரு பெயரும் உண்டு 'சுவரு முட்டி'
குடித்துவிட்டு சுவரில் முட்டுவதாலா -இல்லை
முட்டி முட்டி அழுது விழுவதாலா

குடிகாரன் என்றால் வேலை கிடைக்காது
தண்ணி அடிப்பவன் என்றால் தயவு கிடைக்காது
குடிகாரன் என்றால் பொண்ணு கிடைக்காது
மது குடிக்கிறவனுக்கு மரியாதை கிடைக்காது
செயலே குடி என்பவனிடம் செல்வம் தங்காது
குடிகாரன் பேச்சி விடிஞ்சாப் போச்சி

குடி குடியை கெடுக்கும் என தெரியும் இவனுக்கு
தெரிந்தும் குடிப்பான் அரசாங்கமே ஊத்தி கொடுப்பதால்
இவ்வளவு தெரிந்தும் தொடர்ந்து குடிப்பவனை
படுக்க மெத்தை கொடுத்தாலும் சாக்கடைக்கு போகும்
பன்னிக்கு நிகரின்றி வேறென்ன சொல்ல

குடித்து குடித்து வெறித்து வாழ்ந்தால்
நற்குணம் நல்லுடல் நலிந்து மெலிந்து
வீரியம் குறைந்து வீழ்வது நிச்சயம்
எனவே இப்போதே புரிந்துகொள்
இன்றே திருந்திகொள்
உடனே மாற்றிகொள்
உயர்வை அடைந்துகொள்

Tuesday, May 31, 2011

கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்









கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்..

எங்கோ அலைந்து திரிந்து பிச்சை எடுக்கிறான் மனிதன்
இறைவனின் திருவருளால் ...
இங்கே இருந்த இடத்திலே பிச்சை எடுக்கிறான் இறைவன்
மனிதனின் திருவருளால் ...
இங்கே களவாடிய பணம், கருப்பு பணம்,
ஏமாற்றிய பணம், எளியவரின் பணம்,
பயந்தோர் பணம், மூடர் பணம்
மற்றும் பொருள் அனைத்தும் போடப்படும் ...
இறைவனிடம் கையேந்தினால் எல்லாம் கிடைக்குமாம்
பின் ஏன் இறைவனை எதற்கு கையேந்த வைத்தீர்கள்
இறைவன் கேட்டதை கொடுப்பவன் என்கிறிர்கள்-பின் ஏன்
அவனுக்காக நீங்கள் பிச்சை கேட்கிறிர்கள்
இறைவன் எல்லாம் நிறைந்தவன் என்பது உண்மையென்றால்
இறைவன் கோவிலில் உண்டியல் எதெற்கு?
அதற்கு கடும் காவலும் எதற்கு?
அதையும் மீறி களவு போவது எதனால்?

புகைபிடிப்பவன்(ர்)ள்)



நடமாடும் புகைபோக்கி

மண்ணுலக மாசுபடுத்தி

தன் நலம் கெடுத்து

பிறர் நலமும் கெடுப்பான்

கொஞ்சம் டென்ஷன் என்பான் கொஞ்சம் ப்ராப்ளம் என்பான்

புகை பிடித்து பிடித்து

அதை குடித்து குடித்து

கொஞ்சநாளில் நிரந்தர டென்ஷன்,

ப்ராப்ளம் என்றே அலைவார் நோயால்

புகை பிடிப்பது ஸ்டைல் என்பவன் மடையன்

புகை பிடித்தால் டென்ஷன் குறையும் என்பது

சாக்கடையை குடித்தால் தாகம் தீரும் என்பது போலவே

சிகரட் என்பான் பீடி என்பான் சுருட்டு என்பான்

ஒருநாள் சுருண்டு போவான் நோயால் ..

வேண்டாம் என்றாலும் விடமாட்டான்

தானாய் புரிவான் ஒருநாள் தன்னலம் குன்றி போகும்போது...

புகையால் கருப்பாகப்போவது தன் வாய் மட்டுமல்ல

தன் வாழ்க்கையும் தான் என்று ....

புகை பிடிப்பதேன்பதும் கொஞ்சம்

கொஞ்சமாய் விஷம் உண்பதும் ஒன்றே

தற்கொலை செய்பவன் விஷம் உண்கிறான்..

தற்கொலை செய்பவர்கள் கோழைகலாம்.. சமுகம் சொல்கிறது..

அப்படிஎன்றால் புகை பிடிப்பவர்களும் கோழைகள் தானோ...

Friday, April 8, 2011

சுற்றுப்புற சுழலுக்கு உகந்த வகையில் வெள்ளி நேனோ துணிக்கைகள் தயாரிப்பு

பெருமப் பொருட்களுக்கும் அணு அல்லது மூலக்கூறு கட்டமைப்புகளுக்கும் பயனுள்ள பாலமாக அமைவதால் நேனோ துணிக்கைகள் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீப காலமாக உயிர்தொழில்நுட்பம், உயிர் பொறியியல், நெசவு பொறியியல், நீர் தூய்மையாக்கல் மற்றும் வெள்ளியை அடிப்படை யாககொண்ட நுகர்வுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் வெள்ளி நேனோ துணிக்கைகள் பயன்படுத்தபடுவதால் அவற்றின் முக்கியத்துவம் உயர்ந்த வண்ணம் உள்ளது. எங்களின் தற்போதைய ஆராய்ச்சியில் கடையம் எலுமிச்சம்பழச் சாற்றினை குறுக்கும் காரணியாகவும் நீரினை சுற்றுச் சூழல் தோழமை கரைப்பானாகவும் பயன்படுத்தி வெள்ளி நேனோ துணிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எலுமிச்சம்பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் வெள்ளி நைற்றய்ட்துடன் வினை புரிந்து வெள்ளி நேனோ துணிக்கைகள் உருவாகின. இவ்வாறு உருவாக்கப்பட்ட வெள்ளி நேனோ துணிக்கைகளின் பண்புகள் புற ஊதா நிறமாலைமானி, அகச்சிவப்பு நிறமாலைமானி, தூள் எக்ஸ் கதிர்கள் வளைவுமானி, அலகீடு எலக்ட்ரான் நுண்ணோக்கி, கடத்தும் எலக்ட்ரான் நுண்ணோக்கி போன்ற கருவிகளை பயன்படுத்தி ஆராயப்பட்டன.

Wednesday, April 6, 2011

மாற்றம் வேண்டும் முன்னேற்றம் வேண்டும் என்றால்..

மாற்றம் ஒன்று தான் மாறாதது ..... முன்னேற்றத்தின் ஆணிவேர் மாற்றம் தான்.. உண்ணும் உணவில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் உடுத்தும் உடையில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் செய்யும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம்.. பழகும் பேரிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் ... வேலையாளிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் வணங்கும் கடவுளிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம்... இப்படி அனைத்திலும் மாற்றங்கள் தான் வாழ்வில் ஆர்வத்தையும் அர்த்தத்தையும், ஏன் வாழ்வாதாரத்தையே உருவாக்குகின்றன.... அப்படி இருக்கும் போது நம்மை ஆள்பவர்களை/நமக்கு சேவை செய்ய போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வான நமது மக்களாட்சி கடமை/உரிமையான வாக்கு செலுத்தும் நாளில் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றதிர்க்கு வித்திடுவோம் ....