Tuesday, October 11, 2011

10/10/11-மரண தண்டனைக்கெதிரான நாள்

மரண  தண்டனை
மரணம் ஓர் துயர சம்பவம் 
இயற்கையாய் நேர்வது 
எதேச்சையாய் நடப்பது  
சிலநேரம் எதிர்பாராமல் நிகழ்வது ...
ஆனால் இங்கு மனிதனே மனிதனை நாள் குறித்து கொல்கிறான்..
கேட்டால் அவன் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை என்கிறான்
அட மடயர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ...
உங்களுக்கு மரணதண்டனையோடு   மனிதாபிமானமும் ஜனநாயகமும் கற்றுதந்தவனே மரணதண்டனையை நீக்கிவிட்டான் சட்டத்தில் இருந்து ...
நீங்கள் மட்டும் இன்னும் அதையே பிடித்து கொண்டு இருக்கிறிர்கள் ...தப்பு செய்பவர்களை எல்லாம் கொல்லனும் என்றால் இங்கு ஒரு பய கூட முன்ச மாட்டான்...சட்டம்  இயற்றும் பேர்வழிகளும் கூட ...
எனவே திருந்துங்கள் ..
சட்ட பூர்வமான கொலைகாரர்களே ...
அவர்கள் சட்டத்தை மீறி கொல்கிறார்கள்
நீங்கள் சட்டம் போட்டு கொல்கிறிர்கள்..
மாறுங்கள் ...
தண்டனைகளை மாற்றுங்கள் 
மனிதாபிமானம் பேணுங்கள் 
கடவுளை பற்றி வாய்கிழிய பேசும் 
நல்ல மகா யோக்கியர்களே 
முதலில் மனிதனை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
பிறரை கொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள் ....     

Monday, September 19, 2011

இதுதாண்டா சைட் கிக்

இதுதாண்டா சைட் கிக்
தம்பி  ஜெகனும் நானும்

Sunday, September 18, 2011

தமிழர்களை தலை நிமிர்த்திய பெரியவர்-தந்தை பெரியார்

பகுத்தறிவு  பகலவன் 
முற்போக்கு சிந்தனையாளர் 
சுயநலமில்லா பொது நலவிரும்பி 
தமிழனை தன்னிலை அறிய செய்தவர் 
சாதிகொடுமையை  சாடி அழித்தவர்
எளியோரை காத்த புரட்சியாளர்
பட்டிதொட்டியெங்கும் பகுத்தறிவு ஒளி பரப்பியவர் 
பண்பில் உயர்ந்தவர்
பகுத்தறிவில் சிறந்தவர்
தமிழர்களை தலை நிமிர்த்திய பெரியவர் 
தந்தை பெரியார்   என்னும் சுயமரியாதை   செம்மல் 
பல சிறுமைகளை களைந்தெறிந்த இவரன்றோ பெரியார் 
இவர்பிறந்த இந்நன்னாளில் நாம்  அனைவரும் பகுத்தறிவோடு சுயமரியாதை நிறைந்த சுதந்திர சுகமான வாழ்வு வாழ்ந்திட சூளுரைப்போம் ....


Saturday, September 17, 2011

ஒசோனை காப்போம் நம் உயிர் காக்கும் தோழன் அவன்

செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன்  நாள்
வளிமண்டல ஓசோன் நம்மை சூரியனின் புற ஊத கதிரின் கொடுமையில் இருந்து காக்கிறது
ஆனால் நாம் குலோரோபுளுரோ கர்பன்களை வெளியில் விட்டு ஒசோனை ஓட்டை போடுகிறோம்
வாயு தூய்மைகேட்டை நிறுத்துவோம்
ஒசோனை காப்போம்  நம் உயிர் காக்கும் தோழன் அவன்
செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன்  நாள்
வளிமண்டல ஓசோன் நம்மை சூரியனின் புற ஊத கதிரின் கொடுமையில் இருந்து காக்கிறது
ஆனால் நாம் குலோரோபுளுரோ கர்பன்களை வெளியில் விட்டு ஒசோனை ஓட்டை போடுகிறோம்
வாயு தூய்மைகேட்டை நிறுத்துவோம்
ஒசோனை காப்போம்  நம் உயிர் காக்கும் தோழன் அவன்