Friday, December 2, 2011

இன்றைய தமிழகம் -யதார்த்தமான இளையோர் பார்வை

இன்றைய தமிழகம் -யதார்த்தமான இளையோர்  பார்வை

தானாக உருவானது அன்று வரலாறு.... திட்டம் போட்டு உருவாகிறது இன்று வரலாறு ...

தானாக உருவானது அன்று வரலாறு ....
திட்டம் போட்டு உருவாகிறது இன்று வரலாறு ...
நடந்ததை எழுதினார்கள் அன்று வரலாறு என்று..
நடத்தி எழுதுகிறார்கள் இன்று வரலாறு என்று..

Wednesday, November 30, 2011

யார் இந்த உலகத்தின் காவலாளி ?

யார்  இந்த உலகத்தின் காவலாளி ?
நீயா நானா இல்லை நாமா 
ஒருவரா இருவரா இல்லை எல்லாருமா
எனக்கு தெரிஞ்சாகனும்....
ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் கடவுள் இவ்வுலகை காப்பதாக உறுதியாக சொல்கிறார்கள்....
கடவுள் இவ்வுலகை காக்கிறார் என்றால் எதெற்கு இத்தனை சண்டை சச்சரவு இயற்கை  பேரழிவு ....மனித இனம் மட்டும்தான் கடவுளுக்கு உயர்ந்ததா ...மற்ற உயிரினங்கள் நமக்கு அடிமையா ?...அப்டினா நாம அந்த கடவுளுக்கு அடிமையா?
தந்திரக்காரன், அறிவாளி, உழைப்பாளி, அண்டி பிழைப்பவர்கள் எல்லாரும் உயரும்  போது இவர்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் நிலைமை என்ன?இவர்களை ஆள்வது அந்த கடவுளா ? இல்லை அவனுக்கு அடிமையான மனித அடிமையா ?
இன்றோ அமெரிக்கா உலகத்தின் போலீஸ் போல செயல் படுகிறான். அவனுக்கு யார் இந்த பொறுப்பை கொடுத்தது? பலநாடுகள்  பலமான நாடுகளை அன்டிபிளைக்கின்றன? இதற்க்கு காரணமும் அந்த கடவுளா?அப்படினா அண்டிப்பிழைக்கும் நாடுகளின் கடவுள்கள் டம்மிகளா ? பலமான நாடுகளின் கடவுள்கள் பெரிய அப்பாடக்கர்களா!!
யாரு யாரு
இந்த உலகத்தின் காவலாளி யாரு ?

Saturday, November 26, 2011

ஐயா இனி யாரும் பழைய பழமொழிய நம்பி வாழாதிய...

ஐயா இனி யாரும் பழைய பழமொழிய  நம்பி வாழாதிய...
காலம் மாறிகொண்டே  இருக்கிறது 
சிலர்  அதற்க்கேற்ப  மாறுகிறார்கள் 
லர்  பழைய பஞ்சாங்கம்  பேசிக்கொண்டு  திரிகிறார்கள் 
காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும் .
.நம் கருத்துகளும் மாறவேண்டும் 
இல்லாவிட்டால் நஷ்டப்பட வேண்டிய இருக்கும்..
மேலும் கஷ்டபடவேண்டிய இருக்கும் ....

Monday, November 14, 2011

குழந்தைகள் தினம் 14/11/2011

குழந்தைகள் தினம்
குழந்தைகள் உற்சாகமானவர்கள்
கூடவே நம்மை உற்சாகமாக்குபவர்கள்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள்
கலப்படமில்லா கள்ளமில்லா உள்ளதையும் உணர்வையும் கொண்டவர்கள் 
ஏழ்மை அக்கறையின்மை எனும் பெற்றோரின் பிரச்சனைகளால், நோய் மற்றும் கடத்தல் துன்புறுத்தல் போன்ற அயலாரின் முலம் வரும் பிரச்சனைகளும் அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகிறது ...
இவற்றிலிருந்து குழந்தைகளை காப்போம் ...
குழந்தை அன்பின் உற்சாகத்தின் மகிழ்ச்சியின் பிறப்பிடம்
அவர்களை பேணி சிறந்தவர்களாக வளர உதவுவது பெரியவர்களின் தலையாய கடமையாகும்.
வாழ்க வளர்க வெல்க .....
 

Friday, November 11, 2011

க க க போ-கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்...

கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொள்வதென்பது ஒரு முழு விளிப்புனர்வுற்ற மனதின் செயல்பாடாகும்....
அதனால க க க போ...க க க போ...

வாழ்க்கை என்பது .....

வாழ்க்கை என்பது Bestu
வாழ்ந்து ரசிக்கணும்  Firstu 
அதிகம் எடுக்காதே Restu
எதிலும் வேணும் Interestu
அப்பப்ப எடுக்கணும் Risku
சுறுசுறுப்பா நீ இருந்தா வாழ்க்கை Tasteu
சோம்பேறியா இருந்தா நீ Wasteu  
சமர்ப்பணம் டு பேப்பரில் எழுதுவதற்கு பதிலாக பெஞ்சில் கவிதை எழுதும் சிங்ககுட்டிகளுக்கு ....