Monday, November 22, 2010

எனது ஆய்வு கட்டுரை சுருக்கம்-சுயசேருதல் (Self Assembly) பண்பினால் உருவாகும் சுருள்மாமூலக்கூறுகள் (Helical Supramolecule)


போலா ஆயுதம் போன்ற வடிவமுள்ள, அமைடு வினைத்தொகுதி அற்ற, தாலிக் அமிலத்தை தலை பகுதியாக கொண்ட கரிம இரட்டை அமிலங்கள் (Dicarboxylic Acid) 1 மற்றும் 2 தயாரிக்கபட்டு பண்பறியபட்டன. X-கதிர்விச்சு சோதனை (X-ray Diffraction) மூலம் அறியப்பட்ட இவற்றின் படிக வடிவ அமைப்பில் இந்த கரிம அமில மூலக்கூறுகள் அமிலத்தொகுதியின் (COOH) வழியாக அடுத்தடுத்த மூலகூறுகளுக்கிடையேயான தொடர்ந்த ஹைடிரஜன் பிணைப்பின் (Hydrogen Bond) முலம் சுயசேருதல் (Self Assembly) பண்பினால் சுருண்டு, சுருள்மாமூலக்கூறாக (Helical Supramolecule) அமைந்துள்ளன. இவற்றை 1:1 நீர் எத்தனால் கரைப்பான் கலவையில் கரைத்து மிகமெதுவாக ஆவியாக்க‌ல் முறைப்படி படிகமாக்கி எலக்டரான் நூண்ணோக்கி (Scanning Electron Microscopy) மூலம் ஆய்வு செய்தபொழுது சேர்மம் 1 நுண்குழாய் மற்றும் சட்டம் போன்ற அமைப்பிலும், சேர்மம் 2 நுண்சட்டம் போன்ற அமைப்பிலும் இருப்பது தெளிவாகிறது. கரைப்பான், மற்றும் ஹைடிரஜன் பிணைப்புகள் ஒன்று சேர்ந்து மூலகூறுகளுக்கு இடையேயான சுயசேருதல் பண்பிற்க்கு முக்கிய பங்கு வகிப்பது கண்டறியபட்டுள்ளது. இச்சேர்மங்களுக்கு திரவ நிலை 1H உட்கரு காந்த உடனிசைவு (Nuclear Magnetic Resonance) சோதனையை மெத்தனால் மற்றும் மெத்தனால்+நீர் கலவையில் செய்ததில் கிடைத்த முடிவுகள், திரவ நிலையில் மூலகூறுகளுக்கும் கரைப்பானுக்கும் இடையே வலிமை குறைந்த பிணைப்புகள் இருப்பதற்க்கு வலுசேர்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள புதுமையான சுருள்மாமூலகூறுகளின் சுயச்சேருதல் பண்பிற்க்கான‌ வழிமுறைக்கும் வலுசேர்க்கின்றன.
Hydrogen bonded helices: Synthesis, crystal structure and self-assembled microtubes P. மோசே செல்வகுமார் , E. Suresh and P.S. சுப்ரமணியன், Journal of Molecular Structure, Volume 919, Issues 1-3, 17 February 2009, Pages 72-78

No comments:

Post a Comment