Friday, April 8, 2011
சுற்றுப்புற சுழலுக்கு உகந்த வகையில் வெள்ளி நேனோ துணிக்கைகள் தயாரிப்பு
பெருமப் பொருட்களுக்கும் அணு அல்லது மூலக்கூறு கட்டமைப்புகளுக்கும் பயனுள்ள பாலமாக அமைவதால் நேனோ துணிக்கைகள் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீப காலமாக உயிர்தொழில்நுட்பம், உயிர் பொறியியல், நெசவு பொறியியல், நீர் தூய்மையாக்கல் மற்றும் வெள்ளியை அடிப்படை யாககொண்ட நுகர்வுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் வெள்ளி நேனோ துணிக்கைகள் பயன்படுத்தபடுவதால் அவற்றின் முக்கியத்துவம் உயர்ந்த வண்ணம் உள்ளது. எங்களின் தற்போதைய ஆராய்ச்சியில் கடையம் எலுமிச்சம்பழச் சாற்றினை குறுக்கும் காரணியாகவும் நீரினை சுற்றுச் சூழல் தோழமை கரைப்பானாகவும் பயன்படுத்தி வெள்ளி நேனோ துணிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எலுமிச்சம்பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் வெள்ளி நைற்றய்ட்துடன் வினை புரிந்து வெள்ளி நேனோ துணிக்கைகள் உருவாகின. இவ்வாறு உருவாக்கப்பட்ட வெள்ளி நேனோ துணிக்கைகளின் பண்புகள் புற ஊதா நிறமாலைமானி, அகச்சிவப்பு நிறமாலைமானி, தூள் எக்ஸ் கதிர்கள் வளைவுமானி, அலகீடு எலக்ட்ரான் நுண்ணோக்கி, கடத்தும் எலக்ட்ரான் நுண்ணோக்கி போன்ற கருவிகளை பயன்படுத்தி ஆராயப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment