என்ன வாழ்க்கை இது ?
ஒரே போரு
ஏதாவது புதுசா செய்யலாம்னு பார்த்தா..
அதுக்கு ஏகப்பட்ட தடை... இடைஞ்சல்...
என சிந்திக்கும் மனிதர்கள் இங்கு ஏராளம் ...
தெனமும் காலைலே எந்திச்சு கிளம்பி வேலைக்கு போயிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்கி மீண்டும் எழுந்து கிளம்பி ...
(மறுபடியும் முதல இருந்தா....கண்ணை கெட்டுதே )
சரி இது இருக்கட்டும்
முதல்ல எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்...
எதுக்கு எல்லோரும் ஏன் இப்படி வேல செய்றோம் ?
இந்தமாதிரி நமக்குள்ள ஒரு விதியை உருவாக்கியவன் யார்?
என்ன புதுசா செய்ய போறோம் ?
முடிஞ்சா நீங்க இருக்கிற துறையில இருக்கிற இடத்துல செய்ற வேலைய முதல புதுமையா சூப்பரா செய்யுங்க ..
அப்புறம் துறை மாறி இடம் மாறி பெருசா புதுமை படைக்கலாம்...
தேடல் இல்லா வாழக்கை போருதான்....
அதுக்காக இன்றைய வாழ்வை மகிழ்ச்சியின்றி கழிப்பது சரியில்லைங்க ...
படிச்சத செய்றது போருதான்
பிடிச்சத செய்றது தான் சுப்பர்
அதுக்காக கற்றதை பயன்படுத்தாமல் இருப்பது நன்றா ...
முதல்ல படிச்சத சிறப்பா செய்வோம்
பின்ன பிடிச்சத படிச்சதகொண்டு செம சூப்பரா பண்ணலாம் ....
வாழ்க்கைக்காக
தான் வேலையே
தவிர வேலைக்காக வாழ்க்கை அல்ல....
வாழ்க்கை ஒரு விளையாட்டு மாதிரிங்க....
வெற்றிய மட்டுமே வெறியா கொண்டா விளையாட்ட ரசிக்க முடியாது.
அதே நேரத்துல வெற்றியில்லாத விளையாட்டும் போரடிக்கும்
எனவே வாழ்கையை ரசிச்சிகிட்டே வெற்றிக்காக விளையாடலாம் ....