மரண தண்டனை
மரணம் ஓர் துயர சம்பவம்
இயற்கையாய் நேர்வது
எதேச்சையாய் நடப்பது
சிலநேரம் எதிர்பாராமல் நிகழ்வது ...
ஆனால் இங்கு மனிதனே மனிதனை நாள் குறித்து கொல்கிறான்..
கேட்டால் அவன் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை என்கிறான்
அட மடயர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ...
உங்களுக்கு மரணதண்டனையோடு மனிதாபிமானமும் ஜனநாயகமும் கற்றுதந்தவனே மரணதண்டனையை நீக்கிவிட்டான் சட்டத்தில் இருந்து ...
நீங்கள் மட்டும் இன்னும் அதையே பிடித்து கொண்டு இருக்கிறிர்கள் ...தப்பு செய்பவர்களை எல்லாம் கொல்லனும் என்றால் இங்கு ஒரு பய கூட முன்ச மாட்டான்...சட்டம் இயற்றும் பேர்வழிகளும் கூட ...
எனவே திருந்துங்கள் ..
சட்ட பூர்வமான கொலைகாரர்களே ...
அவர்கள் சட்டத்தை மீறி கொல்கிறார்கள்
நீங்கள் சட்டம் போட்டு கொல்கிறிர்கள்..
மாறுங்கள் ...
தண்டனைகளை மாற்றுங்கள்
மனிதாபிமானம் பேணுங்கள்
கடவுளை பற்றி வாய்கிழிய பேசும்
நல்ல மகா யோக்கியர்களே
முதலில் மனிதனை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
பிறரை கொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள் ....
No comments:
Post a Comment