Friday, October 14, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்-உள்ளுணர்வை தொடர்ந்து செல்--"மாத்தி யோசி'--ஐ-பாட், ஐ-போன் ஐ-பேட்....


அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!'-ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது...

1972 - இல் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியிற் சேர்ந்து படிப்பு வராமல் முதல் செமஸ்டரில் வெளியேற்ற பட்டார்.. பகுதிநேர படிப்பில் சேர்ந்து படித்தார்..நண்பரின் அறையில் இலவசமாக தங்கினார்..படிப்பு செலவுக்கு கொக்கோ கோலா டின் சேகரித்தும்.. சாப்பாடுக்கு ... கோவில் இலவச உணவை சாப்பிட்டார்.. 1974 லில் வீடியோ கேம்ஸ் உருவாக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.. எதற்கு என்று தெரியுமா. இந்தியாவிற்கு புத்த கோவில்களில் புனித பயணம் செய்வதற்காக.. நண்பருடன் இந்தியா பயணம் முடித்து சென்று 1976 இல் ரெனோல்ட் வேயின் என்பவருடன் சேர்ந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.. 1985 இல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற பட்டு நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தார்.. காலம் சுழன்று ஆப்பிள் நிறுவனத்தை 1997 இல் இவரே வாங்கினார்.. அதன் பிறகு இவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது.. ஐ போன் - ஐ பேடு இவரது உருவாக்கலில் உச்சகட்டம்.. 2010 -ல் இவரது சொத்து மதிப்பு 83 லட்சம் கோடி டாலர்.. அமெரிக்க கோடீஸ்வரர்களில் 42 வது இடம்.. எதுவும் இல்லா ஏழையாய் பிறந்து கடின உழைப்பால் உச்சாணிக்கு சென்றவர்..அக்டோபர் 5  2011  இல் புற்றுநோயால் மரணமடைந்தாலும் இவரது புகழ் உலகவரலாற்றில் தொடர்ந்து பயணிக்கிறது ....
 அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால், மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதாரணமான, அறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்' என்ன தெரியுமா? "மாத்தி யோசி'  என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.  
"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது' என்று டிவிட்டரில் பேசப்படுகிறது..



பேச்சில் அல்லாது எண்ணத்திலும், செயலிலும் எதிர் காலத்தை கணித்து வெற்றி பெற்ற ஞானி. சாகரடீசு, அய்ன்சுடீன் போன்றவர்களுக்கு இணையாக, கணினி தகவல் தொழில்நுட்பத்துறையை எழிலி (iCloud) உலகிற்கு உயர்த்தியவர். வருங்காலச் சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.
நாளை நாம் வாழ்வோம் என்பது நிச்சயமில்லை.  
நாம் வாழும் இன்றைய நாளே நமது வாழ்நாளின் கடைசி நாள் என்று நினைத்து, நம் உள்ளுணர்வைப் பின்பற்றி நேரத்தை வீணாக்காமல் செயல் படு' என்ற தத்துவத்தை மரணத்தின் விளிம்பிலும் கடைப்பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ் இன்றைய உலகின் உதாரண மனிதர் ....

No comments:

Post a Comment