அன்னமிட்ட கை அன்று
அன்னமில்லா கை இன்று
மதிப்புக்குரியவன் அன்று
மதிப்பிலாமல் போனான் இன்று
கொடுத்து வாழ்ந்தவன் அன்று
அரசு கொடுப்பதை வாங்குகிறான் இன்று
பலருக்கு உயிர் கொடுத்தவன்
இப்போது உயிரிலந்துகொண்டிருக்கிறான்
விவசாயம் சாய்ந்து போனது
விவசாயி வீழ்ந்து போகிறான்
சாயம் போனது விவசாயியின் வேட்டி
காவி வேட்டி கட்டினால் ஆன்மீகவாதி
கரைவேட்டி கட்டினால் அரசியல்வாதி
கரியான வேட்டி கட்டினால் விவசாயி என்ற நிலைமை இன்று ...
No comments:
Post a Comment