Wednesday, November 30, 2011

யார் இந்த உலகத்தின் காவலாளி ?

யார்  இந்த உலகத்தின் காவலாளி ?
நீயா நானா இல்லை நாமா 
ஒருவரா இருவரா இல்லை எல்லாருமா
எனக்கு தெரிஞ்சாகனும்....
ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் கடவுள் இவ்வுலகை காப்பதாக உறுதியாக சொல்கிறார்கள்....
கடவுள் இவ்வுலகை காக்கிறார் என்றால் எதெற்கு இத்தனை சண்டை சச்சரவு இயற்கை  பேரழிவு ....மனித இனம் மட்டும்தான் கடவுளுக்கு உயர்ந்ததா ...மற்ற உயிரினங்கள் நமக்கு அடிமையா ?...அப்டினா நாம அந்த கடவுளுக்கு அடிமையா?
தந்திரக்காரன், அறிவாளி, உழைப்பாளி, அண்டி பிழைப்பவர்கள் எல்லாரும் உயரும்  போது இவர்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் நிலைமை என்ன?இவர்களை ஆள்வது அந்த கடவுளா ? இல்லை அவனுக்கு அடிமையான மனித அடிமையா ?
இன்றோ அமெரிக்கா உலகத்தின் போலீஸ் போல செயல் படுகிறான். அவனுக்கு யார் இந்த பொறுப்பை கொடுத்தது? பலநாடுகள்  பலமான நாடுகளை அன்டிபிளைக்கின்றன? இதற்க்கு காரணமும் அந்த கடவுளா?அப்படினா அண்டிப்பிழைக்கும் நாடுகளின் கடவுள்கள் டம்மிகளா ? பலமான நாடுகளின் கடவுள்கள் பெரிய அப்பாடக்கர்களா!!
யாரு யாரு
இந்த உலகத்தின் காவலாளி யாரு ?

No comments:

Post a Comment