Monday, November 22, 2010

எனது ஆய்வு கட்டுரை சுருக்கம்-சுயசேருதல் (Self Assembly) பண்பினால் உருவாகும் சுருள்மாமூலக்கூறுகள் (Helical Supramolecule)


போலா ஆயுதம் போன்ற வடிவமுள்ள, அமைடு வினைத்தொகுதி அற்ற, தாலிக் அமிலத்தை தலை பகுதியாக கொண்ட கரிம இரட்டை அமிலங்கள் (Dicarboxylic Acid) 1 மற்றும் 2 தயாரிக்கபட்டு பண்பறியபட்டன. X-கதிர்விச்சு சோதனை (X-ray Diffraction) மூலம் அறியப்பட்ட இவற்றின் படிக வடிவ அமைப்பில் இந்த கரிம அமில மூலக்கூறுகள் அமிலத்தொகுதியின் (COOH) வழியாக அடுத்தடுத்த மூலகூறுகளுக்கிடையேயான தொடர்ந்த ஹைடிரஜன் பிணைப்பின் (Hydrogen Bond) முலம் சுயசேருதல் (Self Assembly) பண்பினால் சுருண்டு, சுருள்மாமூலக்கூறாக (Helical Supramolecule) அமைந்துள்ளன. இவற்றை 1:1 நீர் எத்தனால் கரைப்பான் கலவையில் கரைத்து மிகமெதுவாக ஆவியாக்க‌ல் முறைப்படி படிகமாக்கி எலக்டரான் நூண்ணோக்கி (Scanning Electron Microscopy) மூலம் ஆய்வு செய்தபொழுது சேர்மம் 1 நுண்குழாய் மற்றும் சட்டம் போன்ற அமைப்பிலும், சேர்மம் 2 நுண்சட்டம் போன்ற அமைப்பிலும் இருப்பது தெளிவாகிறது. கரைப்பான், மற்றும் ஹைடிரஜன் பிணைப்புகள் ஒன்று சேர்ந்து மூலகூறுகளுக்கு இடையேயான சுயசேருதல் பண்பிற்க்கு முக்கிய பங்கு வகிப்பது கண்டறியபட்டுள்ளது. இச்சேர்மங்களுக்கு திரவ நிலை 1H உட்கரு காந்த உடனிசைவு (Nuclear Magnetic Resonance) சோதனையை மெத்தனால் மற்றும் மெத்தனால்+நீர் கலவையில் செய்ததில் கிடைத்த முடிவுகள், திரவ நிலையில் மூலகூறுகளுக்கும் கரைப்பானுக்கும் இடையே வலிமை குறைந்த பிணைப்புகள் இருப்பதற்க்கு வலுசேர்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள புதுமையான சுருள்மாமூலகூறுகளின் சுயச்சேருதல் பண்பிற்க்கான‌ வழிமுறைக்கும் வலுசேர்க்கின்றன.
Hydrogen bonded helices: Synthesis, crystal structure and self-assembled microtubes P. மோசே செல்வகுமார் , E. Suresh and P.S. சுப்ரமணியன், Journal of Molecular Structure, Volume 919, Issues 1-3, 17 February 2009, Pages 72-78

Tuesday, September 21, 2010

உற்சாகம் எனும் ...

உற்சாகம் எனும் வெள்ளி ஒளிர்ந்து
சோம்பல் எனும் சனி கழிந்து
உழைப்பு எனும் ஞாயிறு சுடர்விட்டால்
மகிழ்ச்சி எனும் திங்கள் பிரகாசிக்கும்.....
விழிப்புணர்வு எனும் வெள்ளி ஒளிர்ந்து
ஊழல் & குடும்ப அரசியல் எனும் சனி தொலைந்து
சேவைஉணர்வு எனும் ஞாயிறு பிறந்தால்
முன்னேற்றம் எனும் திங்கள் பிரகாசிக்கும் .....

சோர்ந்து வாழ்ந்தால் வீழ்வாய்....

சோர்ந்து வாழ்ந்தால் வீழ்வாய்....
சார்ந்து வாழ்ந்தால் தாழ்வாய்...
சேர்ந்து வாழ்ந்தால் வளர்வாய்...
உழைத்து வாழ்ந்தால் உயர்வாய்...
உனக்காய் வாழ்ந்தால் மகிழ்வாய்...
பிறர்க்காய் வாழ்ந்தால் ?.......

Saturday, August 14, 2010

குத்துமதிப்பா அடிச்சதுக்கே...


துவக்கமும் முடிவும் மனிதனுக்கு குழப்பம்.நடுவில் வாழும் வாழ்க்கையோ அவன் கையில் அடக்கம் ...
படிச்சதை செய்றது ஒரு வகை ..பிடிச்சதை செய்றது ஒருவகை. பிடிச்சதை படிச்சி செய்றது ஒருவகை ..படிச்சதை பிடிச்சி செய்றது ஒருவகை. எதையும் பிடிச்சி படிச்சி செய்றது தனிவகை ...
பணமும் குணமும் இன்றைய சமுதாய நடைமுறையில் மனிதர்க்கு இரு கால்கள் அல்லது கைகள் ..
லட்சியம் இல்லாத வாழ்க்கை பாதைகள் இல்லாத காடு..அலட்சியம் நிறைந்த வாழ்க்கை சொரிமணல் நிறைந்த பாலை...
உன்னை அறிந்தால் உலகத்தில் நீ வாழலாம்...பிறரையும் நீ அறிந்தால் உயர்வாய் நீ வாழலாம்...
தன்னையும் முன்னேத்தி பிறரையும் முன்னேத்துறான் பாரு, அவன்தான் தன்னிகரற்ற தலைவன்...
தான் முன்னேரட்டாலும் பரவா இல்லன்னு பிறர் முன்னேர்ற்றதில முக்கிய பங்கு வகிக்கிறான் பாரு, அவன் தன்னலமற்ற தலைவன்..
தன்னை முன்னேத்த பிறரை கவுத்துறவன் இருக்கானே அவன் தரங்கெட்ட தன்னல பிராணி...
தன் வேலைய கண்ணும் கருத்துமா செய்றவனும், பிறர் வேலயில தலையிடாதவனும் உருப்படுவான்...
தன்னை பற்றி ஒரேயடியா பெருமை படுரவனும் , பிறர் மேல் எப்போதும் பொறாமை படுரவனும் உருப்படுவது சிரமம்...
தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொள்ரவனும், பிறரை தன் கீழ் மட்டம் தட்டுரவனும் மேம்படுவது கடினம்...
வளமான வாழ்க்கை என்பது ஒரு குரிப்பிட்ட சூத்திரம் தான்...அதை கற்று கொண்டால் யாரும் வளமான வாழ்க்கை வாழலாம் ....
குத்துமதிப்பா அடிச்சதுக்கே இப்படின்னா குறிவச்சி அடிச்சா எப்படியாகும் ?
அரைகுறை நம்பிக்கையோடு இவ்வளவு தூரம் பயணம்!
முழுநிறை நம்பிக்கை கொண்டால் எவ்வளவு உயரம் பயணம்!
--
முன்னேறு...முன்னேற்று...முன்செல்லு...
முயல்வதும் விழுவதும் எழுவதும் மீண்டும்
முயல்வதும் முழுமையும் வெல்வதற்கே .................. மோசேகு

Wednesday, March 3, 2010

வாழ்க்கை கல்வி வியாபாரிகளும் கடவுள் வியாபாரிகளும்(Life education& God business)

வாழ்க விழிப்புணர்வு பெற்றுகொண்டிருக்கும் சமுதாயம் ......
இன்றைய உலகம் வாழக்கை கல்வி மற்றும் கடவுள் ஏமாற்று வியாபாரம் ஜோராய் நடக்கும் சந்தை ...... கடவுளை தெரிந்தவனும் இல்லை புரிந்தவனும் இல்லை ..அந்த கடவுள் அண்ணனும் இந்த ஏமாற்று வியாபாரிகள் கூட சேர்பவர் அல்ல ..அந்த கடவுள் அண்ணனால் இவுலகம் படைக்க பட்டேதேன்றால் இவுலகில் இன்னும் நம்மால் புரிய முடியாத விசயங்கள் என்ன முடியாதவை ..கடவுள் அண்ணனால் படைக்கப்பட்ட விசயங்களையே புரிய முடியாத ஜென்மங்கள் அந்த கடவுள் அண்ணனின் மகன் போலவும் நண்பன் போலவும் அவரை புரிந்து விட்டதாகவும் அப்பாவி மனிதர்களை அந்த கடவுள் அண்ணனிடம் கொண்டு சேர்க்கும் ஏஜெண்டுகளாக தூதுவர்களாக தங்களை அறிவித்து கொண்டு பணம் பறித்து புகழ் உருவாக்குவது எவ்வளவு ஏமாத்து... அதாச்சும் பரவா இல்ல தான்தான் கடவுள் என சொல்லும் அவதாரிகள் எனும் கபடவேடதாரிகளை என்ன சொல்வது .....மக்கள் நோயை தீர்ப்பதாகவும் அமைதி மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறும் இவர்கள் கை தேர்ந்த மருத்துவர்களா மனநல நிபுணர்களா இல்ல கோமாளிகளா . வாழ்வது எவ்வாறு வளர்வது எவ்வாறு என கற்று கொடுக்கும் இவர்களின் வழிகளை பின்பற்றி வீணாய் போனவர்கள் எத்தனையோ ... பாவம் ....இவர்களை நம்ம்பும் மனிதர்களை என்ன சொல்வது...அறியாமை நீக்குங்கள்
கவனமாய் நடக்காவிட்டால் நமக்கு துன்பம் தரும் பொருள்களை நம்மிடம் நிரந்தரமாய் விற்று விடுவார்கள் இந்த வாழ்க்கை கல்வி வியாபாரிகளும் கடவுள் வியாபாரிகளும் ...
காமகோடி நித்தியானந்த பிரேமானந்த தேவநாத ..........அட கலக்குரிங்கப்பா
அப்பாவி மனிதர்களே இந்த அற்ப மனிதர்களின் வியாபாரத்திற்கு பலியாகிவிடாமல் கவனமாய் சுய விழிப்புணர்வுடன் வாழ்வை சுவையுங்கள் ....

Friday, February 26, 2010

அறிவியலோடு நான் ---------------

நம் புலிகளை காப்போம் -Save our Tiger-மனிதனே .....சிந்தனை செய் ....



நம் புலிகளை காப்போம்....நம் புலிகளை காப்போம்....
இது இந்திய அரசின் விளம்பரம்....
கிரிகெட் வீரர் டோனியும் , கால்பந்து வீர்ர் புட்டியாவும் தொலைகாட்சியில் விளம்பரத்தில் ...............
இந்திய அரசு ஏராளமான பணத்தை செலவிடுகிறதாம் புலிகளை பாதுகாக்க(இந்தியாவில் )
ஏனென்றால் புலி இந்தியாவின் தேசிய விலங்காம் .............
....................
இதே அரசு .......
புலி என்று பெயர் கொண்ட ஒவ்வொரு தமிழனையும் (ஈழத்தில்)
கூண்டோடு கொலை செய்ய கோடி கோடியாய் செலவிட்டதாம்....
ஐயோ ...
விலங்குகள் போல கொலை செய்யப்பட்ட அடைபட்ட எம் ஈழத்தமிழரை...
புலிக்கொடி கொண்டோரை... தேசிய இனமாக அறிவிக்க மறுக்கும் மடச்சமுகமே... தேசிய விலங்காகவாவது அறிவித்து காக்க முயல் .....
மனிதனை விட விலங்கின் உயிர் உனக்கு விலையுயர்ந்ததாய் பொய் விட்டதா? மனிதனே .....சிந்தனை செய் ....