Monday, June 20, 2011

கலங்காதே தமிழா கலங்காதே

கலங்காதே தமிழா கலங்காதே


காலம் விரைவில் மாறும்

நம் கவலைகள் எல்லாம் தீரும்

நம்மை இழிவுபடுத்தி அழிவு செய்தோர்

வீழ்ந்தொழியும் காலம் இல்லை வெகு தூரம்..



வேறெங்கும் இல்லை நமக்கு பகைவர்கள்

நமக்குள்ளே உண்டு பல கயவர்கள்



தகுதிபடுத்து தமிழா உன்னை தகுதிபடுத்து

தரங்கெட்ட அரக்கர்களை மிஞ்ச உன்னை தகுதிபடுத்து



விழித்திடு தமிழா விழித்திடு

வேறினம் உன்னை வேரருக்குமுன் விழித்திடு



ஒன்றுசேர் தமிழா ஒன்று சேர்

உன்னை அழிப்பவர்களை ஒழிக்க ஒன்றுசேர்



போராடு தமிழா போராடு

மூடத்தனத்தை ஒழித்திட போராடு



முயன்றிடு தமிழா முயன்றிடு

முழு மூச்சோடு வளர்ந்திட முயன்றிடு



உழைத்திடு தமிழா உழைத்திடு

வசந்தமாய் வாழ்ந்திட உயர்ந்திட உழைத்திடு

முன்னேறு தமிழா முன்னேறு

மூட கூடம் உன்னை வீழ்த்துமுன் முன்னேறு

முன்னேற்று தமிழா முன்னேற்று

உன் இனம் முழுதையும் முன்னேற்று

முன்செல்லு தமிழா முன்செல்லு

தமிழினம் தலைநிமிர முன்செல்லு




Friday, June 17, 2011

உஷாரைய்யா உஷாரு ....ஊழல் ஊழல் உஷாரு

ஊழல் ஊழல் ...
பிறந்த புள்ளைக்கு கொடுக்குற பால்மாவு தயாரிப்பதுல ஊழல் ...
செத்தவர்களை  அடக்கம் பண்ண பெட்டி வாங்குனதுல ஊழல் ...
இதெல்லாம் நடுக்குற தேசம் இந்த தேசம் இந்திய வேஷம் ....
வீடு கட்றதுல ஊழல் ..விளையாட்டு நடத்துறதுல ஊழல்
சக்கரை வாங்குனதுல ஊழல் ஏற்றுமதி இறக்குமதின்னு ஊழல்
சொத்து வாங்குறதுல ஊழல் 2G3G ன்னு ஊழலோ ஊழல் லொள் லொள்
ஆயிரம் அடிச்சா சின்ன அதிகாரி அதயே லச்சமா அடிச்சா பெரிய அதிகாரி
கோடில அடிச்சா சின்ன அரசியல் வாதி அதையே
கோடிகோடியா அடிச்சா பெரிய அரசியல் வாதி
எங்கும் ஊழல்! எதிலும் ஊழல் !
ஆகா...
கவனம் மக்களே
ஊழலால ஒருத்தேன் வளர்ந்தா  ஓராயிரம் பேர் வீழவேண்டியிருக்கும்..
எனவே உஷாரைய்யா உஷாரு .... ஊழல் ஊழல்.. உஷாரு


Wednesday, June 8, 2011

நன்றாய் நாமும் வாழ்வோம்....

வந்து  விட்டு வாளாவிருந்து விட்டு
வெந்ததை தின்றுவிட்டு வெறுமையாய் இருந்துவிட்டு
சோம்பி திரிந்து விட்டு சோகம் என்றிருந்து
சுகத்தை இழந்து விட்டு விரக்தியில் வீழ்ந்து விடாமல்

பிடித்த செயல்புரிந்து உழைப்பை உற்சாகம்கொண்டு
உயர்வாய் மாற்றிகொண்டு மகிழ்ச்சி  எழுச்சி கொண்டு
தொடர்ந்து முன்னேறிக்கொண்டு சமுகமுன்னேற்றம்
கண்டு வளமும் நலமும் சேர்த்து
நன்றாய் நாமும் வாழ்வோம்.


Tuesday, June 7, 2011

மண்ணும் மனிதனும்



மண்ணிலே பலவகை உண்டு

செம்மண்,கரிசல்மண், வண்டல்மண்... என்று

ஓவொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. ஏனெனில் ஒவ்வொரு மண்ணும் ஒருவகையான தாதுக்களையும் சத்துக்களையும் கொண்டது. அதற்க்கேற்ப தனிச்சிறப்புமிக்க தாவரங்களை வளர்க்கும் சக்தி கொண்டது. எடுத்துகாட்டாக எலுமிச்சை ஒருமண்ணிலும், நெற்பயிர் ஒருமண்ணிலும் பனை ஒருமண்ணிலும் சிறப்பாக  வளர்ந்து பலன் தரும். இந்த மண்வகைகளில் பயன்பாடுகளில் வேறுபாடு இருக்கிறது.ஆனால் ஒவ்வொன்றும் எதோ ஒரு சிறப்பான பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.ஒருவிதமண்ணிலே பல்வேறுவிதமான உயிர்கள் பலுகி பெருகுகிறது.எனினும் ஒருமண்வகை ஒருவகையான உயிர்களை திறம்பட வளர்கின்றன.

தொடர்ந்து பலன் தந்த மண்ணில் சிறிது மகசூல் குறைந்தால் உரம் என்ற பெயரில் வேதிப்பொருட்களை வீச நமக்கு சொல்லிதரப்பட்டிருக்கிறது. மண்ணில் சத்து இல்லை என்று வேதிப்பொருட்களை அள்ளி விதைப்பதால் என்ன ஆகும் மண் கெட்டு போகும். வீரியமின்மைக்கு மாத்திரை சாப்பிட்ட மனிதன் நலமிழந்து போவது போல. ஆனால் அது விளைவித்த தாவரம் இறந்தால் அதையே அது நல்ல உரமாக எடுத்து கொண்டு மீண்டும் திறன்மிக்க தாவரங்களை வளர்க்கும்.பெரும்பலன் தரும்.

இவ்வாறு அம்மண்ணில் விளைந்த செடியோ மரமோ உரமாகி மீண்டும் பல் உயிர்களை வாழ வளர செய்கிறது. தாவரங்களின் தற்கொடை அதன் சந்ததியை திறம்பட உருவாக்கி வளர்க்கிறது. 

இம்மண்னுடன் மனிதனை ஒப்பிட்டுபார்ப்போம் .

மண்போல மனிதனிலும் பலவகை உண்டு.இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு வகையான மண்ணில் வாழ்பவரும் உடலமைப்பு குணாதிசயம் மற்றும் பலவற்றில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா வகையான மனிதனுக்குள்ளும் எதோ ஒன்றை உருவாகும், செயல்படுத்தும் பயனுள்ள ஆற்றல் இயற்கையிலே அமைந்திருக்கிறது. அதை புரிந்து கொண்டு,கண்டுணர்ந்து சரியானமுறையில் வெளிக்கொணர்ந்து விட்டால் அவ்வளவுதான் அது செயற்கரிய செயலயும்செய்து முடிக்குமென்பது நன்குணர்ந்த உண்மையாகும்.

எனவே கருப்பு சிவப்பு மாநிறம் என்றோ ஒல்லி குண்டு உயரம் குட்டை என்றோ அதிமேதாவி மேதாவி முட்டாள் என்றோ ஏழை பணக்காரன் நடுத்தரமானவன் என்றோ நான் அவன்(ள)ஐ விட பெரியவன் சின்னவன் என்றோ ஒப்பிடுவதிலோ வேறுபடுத்துவதிலோ எதுவும் பெரிதாய் விளைந்திட போவதில்லை யாருக்கோ ஒருவருக்கு மனகுடச்சலைதவிர.

அந்த வேலையை செய்பவன் சிறப்பானவன் என்றோ ..இந்தவேலைய செய்பவன் இழிவானவன் என்றோ எண்ணுவது உண்மைக்கு புறம்பானது.ஏனென்றால் எல்லா பணிகளும் தனித்துவம்மிக்கவை.பண்ணும்  பணத்தை வைத்து பணியின் மதிப்பை எடை போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. பணத்துக்காக உழைப்பது  மட்டுமே இன்றைய வாழ்வின் நிலையாகிவிட்டது.உழைப்பது உயர்வதற்கே என்பதை பணத்தில் உயர்வதை  மட்டுமே புரிந்துள்ளது இச்சமுதாயம்.ஆனால் உழைப்பதேனும் செயல் பணத்தில் உயர்வதற்கு மட்டுமல்ல உள்ளம் களித்து மேம்பாடு அடைவதற்க்குமே.
எனவே படித்த படிப்புக்கும் அதனால்கிடைத்த பணிக்கும் அதில் ஆர்வமின்றி உழைத்தால் கிடைத்த பணத்துக்கும் வாழ்கையை பலிகொடுத்து விட்டு புலம்பாமல் வாழ்வை தனக்கு பிடித்த  பாணியில் பிடித்த பணியில் உளமார ஈடுபட்டு உழைத்து உளம் களித்து உயர்வதே சிறப்பாகும். 

ஏனென்றால் எல்லா உயிர்களும் தனிதுவம்மிக்கது.

தன்னுயரம் தன்சிறப்பு உணர்வது மனிதனின் தனிச்சிறப்பு .

தன தனித்தன்மை தனித்திறமை கண்டு அதை உணர்ந்து வெளிக்கொணர்ந்து வளர்த்தால் இயற்கையை  நேசித்து நடந்தால் வானுயர வளர்ந்தோங்கலாம் .செழிப்பாய் வாழ்ந்து செம்மையான வையகத்தை உருவாக்கலாம்.   

Thursday, June 2, 2011

குடிகாரன்(ள்)-தண்ணியை அடித்து தன்னை மறப்பவன்




சும்மா எப்போதாவது என ஆரம்பித்து
எப்போதும் தண்ணியிலே உழல்பவன்
பெருமைக்கு குடித்து சிறுமை அடைபவன்
போட்டி போட்டு குடித்து வந்தி எடுப்பவன்
நிறைய குடிப்பதை பெருமையாய் பேசுபவன்
தண்ணியேஊத்தாமல் குடிப்பதை தைரியம் என்பவன்
கஷ்டத்தை காரணம் காட்டி நஷ்டத்தை அடைபவன்
கவலையை மறக்க என்று ஆரம்பித்து கண்ணீரிலே வாழ்பவன்
தண்ணியை அடித்துவிட்டு பிறரிடம் உளறிவிட்டு
செமத்தியாய் வாங்கிவிட்டு குப்புற விழுந்து தன்னையே மறப்பவன்
தான் தெருவிலே விழுந்து குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வருபவன்
இவனின் மறுபெயர் 'தண்ணி அடிப்பவன்'
தண்ணி ஊத்தி தண்ணி அடிப்பதாலா -இல்லை
தண்ணியே ஊத்தாமல் தண்ணி அடிப்பதாலா
இன்னொரு பெயரும் உண்டு 'சுவரு முட்டி'
குடித்துவிட்டு சுவரில் முட்டுவதாலா -இல்லை
முட்டி முட்டி அழுது விழுவதாலா

குடிகாரன் என்றால் வேலை கிடைக்காது
தண்ணி அடிப்பவன் என்றால் தயவு கிடைக்காது
குடிகாரன் என்றால் பொண்ணு கிடைக்காது
மது குடிக்கிறவனுக்கு மரியாதை கிடைக்காது
செயலே குடி என்பவனிடம் செல்வம் தங்காது
குடிகாரன் பேச்சி விடிஞ்சாப் போச்சி

குடி குடியை கெடுக்கும் என தெரியும் இவனுக்கு
தெரிந்தும் குடிப்பான் அரசாங்கமே ஊத்தி கொடுப்பதால்
இவ்வளவு தெரிந்தும் தொடர்ந்து குடிப்பவனை
படுக்க மெத்தை கொடுத்தாலும் சாக்கடைக்கு போகும்
பன்னிக்கு நிகரின்றி வேறென்ன சொல்ல

குடித்து குடித்து வெறித்து வாழ்ந்தால்
நற்குணம் நல்லுடல் நலிந்து மெலிந்து
வீரியம் குறைந்து வீழ்வது நிச்சயம்
எனவே இப்போதே புரிந்துகொள்
இன்றே திருந்திகொள்
உடனே மாற்றிகொள்
உயர்வை அடைந்துகொள்