Thursday, June 2, 2011

குடிகாரன்(ள்)-தண்ணியை அடித்து தன்னை மறப்பவன்




சும்மா எப்போதாவது என ஆரம்பித்து
எப்போதும் தண்ணியிலே உழல்பவன்
பெருமைக்கு குடித்து சிறுமை அடைபவன்
போட்டி போட்டு குடித்து வந்தி எடுப்பவன்
நிறைய குடிப்பதை பெருமையாய் பேசுபவன்
தண்ணியேஊத்தாமல் குடிப்பதை தைரியம் என்பவன்
கஷ்டத்தை காரணம் காட்டி நஷ்டத்தை அடைபவன்
கவலையை மறக்க என்று ஆரம்பித்து கண்ணீரிலே வாழ்பவன்
தண்ணியை அடித்துவிட்டு பிறரிடம் உளறிவிட்டு
செமத்தியாய் வாங்கிவிட்டு குப்புற விழுந்து தன்னையே மறப்பவன்
தான் தெருவிலே விழுந்து குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வருபவன்
இவனின் மறுபெயர் 'தண்ணி அடிப்பவன்'
தண்ணி ஊத்தி தண்ணி அடிப்பதாலா -இல்லை
தண்ணியே ஊத்தாமல் தண்ணி அடிப்பதாலா
இன்னொரு பெயரும் உண்டு 'சுவரு முட்டி'
குடித்துவிட்டு சுவரில் முட்டுவதாலா -இல்லை
முட்டி முட்டி அழுது விழுவதாலா

குடிகாரன் என்றால் வேலை கிடைக்காது
தண்ணி அடிப்பவன் என்றால் தயவு கிடைக்காது
குடிகாரன் என்றால் பொண்ணு கிடைக்காது
மது குடிக்கிறவனுக்கு மரியாதை கிடைக்காது
செயலே குடி என்பவனிடம் செல்வம் தங்காது
குடிகாரன் பேச்சி விடிஞ்சாப் போச்சி

குடி குடியை கெடுக்கும் என தெரியும் இவனுக்கு
தெரிந்தும் குடிப்பான் அரசாங்கமே ஊத்தி கொடுப்பதால்
இவ்வளவு தெரிந்தும் தொடர்ந்து குடிப்பவனை
படுக்க மெத்தை கொடுத்தாலும் சாக்கடைக்கு போகும்
பன்னிக்கு நிகரின்றி வேறென்ன சொல்ல

குடித்து குடித்து வெறித்து வாழ்ந்தால்
நற்குணம் நல்லுடல் நலிந்து மெலிந்து
வீரியம் குறைந்து வீழ்வது நிச்சயம்
எனவே இப்போதே புரிந்துகொள்
இன்றே திருந்திகொள்
உடனே மாற்றிகொள்
உயர்வை அடைந்துகொள்

No comments:

Post a Comment