மண்ணிலே பலவகை உண்டு
செம்மண்,கரிசல்மண், வண்டல்மண்... என்று
ஓவொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. ஏனெனில் ஒவ்வொரு மண்ணும் ஒருவகையான தாதுக்களையும் சத்துக்களையும் கொண்டது. அதற்க்கேற்ப தனிச்சிறப்புமிக்க தாவரங்களை வளர்க்கும் சக்தி கொண்டது. எடுத்துகாட்டாக எலுமிச்சை ஒருமண்ணிலும், நெற்பயிர் ஒருமண்ணிலும் பனை ஒருமண்ணிலும் சிறப்பாக வளர்ந்து பலன் தரும். இந்த மண்வகைகளில் பயன்பாடுகளில் வேறுபாடு இருக்கிறது.ஆனால் ஒவ்வொன்றும் எதோ ஒரு சிறப்பான பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.ஒருவிதமண்ணிலே பல்வேறுவிதமான உயிர்கள் பலுகி பெருகுகிறது.எனினும் ஒருமண்வகை ஒருவகையான உயிர்களை திறம்பட வளர்கின்றன.
தொடர்ந்து பலன் தந்த மண்ணில் சிறிது மகசூல் குறைந்தால் உரம் என்ற பெயரில் வேதிப்பொருட்களை வீச நமக்கு சொல்லிதரப்பட்டிருக்கிறது. மண்ணில் சத்து இல்லை என்று வேதிப்பொருட்களை அள்ளி விதைப்பதால் என்ன ஆகும் மண் கெட்டு போகும். வீரியமின்மைக்கு மாத்திரை சாப்பிட்ட மனிதன் நலமிழந்து போவது போல. ஆனால் அது விளைவித்த தாவரம் இறந்தால் அதையே அது நல்ல உரமாக எடுத்து கொண்டு மீண்டும் திறன்மிக்க தாவரங்களை வளர்க்கும்.பெரும்பலன் தரும்.
இவ்வாறு அம்மண்ணில் விளைந்த செடியோ மரமோ உரமாகி மீண்டும் பல் உயிர்களை வாழ வளர செய்கிறது. தாவரங்களின் தற்கொடை அதன் சந்ததியை திறம்பட உருவாக்கி வளர்க்கிறது.
இம்மண்னுடன் மனிதனை ஒப்பிட்டுபார்ப்போம் .
மண்போல மனிதனிலும் பலவகை உண்டு.இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு வகையான மண்ணில் வாழ்பவரும் உடலமைப்பு குணாதிசயம் மற்றும் பலவற்றில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா வகையான மனிதனுக்குள்ளும் எதோ ஒன்றை உருவாகும், செயல்படுத்தும் பயனுள்ள ஆற்றல் இயற்கையிலே அமைந்திருக்கிறது. அதை புரிந்து கொண்டு,கண்டுணர்ந்து சரியானமுறையில் வெளிக்கொணர்ந்து விட்டால் அவ்வளவுதான் அது செயற்கரிய செயலயும்செய்து முடிக்குமென்பது நன்குணர்ந்த உண்மையாகும்.
எனவே கருப்பு சிவப்பு மாநிறம் என்றோ ஒல்லி குண்டு உயரம் குட்டை என்றோ அதிமேதாவி மேதாவி முட்டாள் என்றோ ஏழை பணக்காரன் நடுத்தரமானவன் என்றோ நான் அவன்(ள)ஐ விட பெரியவன் சின்னவன் என்றோ ஒப்பிடுவதிலோ வேறுபடுத்துவதிலோ எதுவும் பெரிதாய் விளைந்திட போவதில்லை யாருக்கோ ஒருவருக்கு மனகுடச்சலைதவிர.
அந்த வேலையை செய்பவன் சிறப்பானவன் என்றோ ..இந்தவேலைய செய்பவன் இழிவானவன் என்றோ எண்ணுவது உண்மைக்கு புறம்பானது.ஏனென்றால் எல்லா பணிகளும் தனித்துவம்மிக்கவை.பண்ணும் பணத்தை வைத்து பணியின் மதிப்பை எடை போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. பணத்துக்காக உழைப்பது மட்டுமே இன்றைய வாழ்வின் நிலையாகிவிட்டது.உழைப்பது உயர்வதற்கே என்பதை பணத்தில் உயர்வதை மட்டுமே புரிந்துள்ளது இச்சமுதாயம்.ஆனால் உழைப்பதேனும் செயல் பணத்தில் உயர்வதற்கு மட்டுமல்ல உள்ளம் களித்து மேம்பாடு அடைவதற்க்குமே.
எனவே படித்த படிப்புக்கும் அதனால்கிடைத்த பணிக்கும் அதில் ஆர்வமின்றி உழைத்தால் கிடைத்த பணத்துக்கும் வாழ்கையை பலிகொடுத்து விட்டு புலம்பாமல் வாழ்வை தனக்கு பிடித்த பாணியில் பிடித்த பணியில் உளமார ஈடுபட்டு உழைத்து உளம் களித்து உயர்வதே சிறப்பாகும்.
ஏனென்றால் எல்லா உயிர்களும் தனிதுவம்மிக்கது.
தன்னுயரம் தன்சிறப்பு உணர்வது மனிதனின் தனிச்சிறப்பு .
தன தனித்தன்மை தனித்திறமை கண்டு அதை உணர்ந்து வெளிக்கொணர்ந்து வளர்த்தால் இயற்கையை நேசித்து நடந்தால் வானுயர வளர்ந்தோங்கலாம் .செழிப்பாய் வாழ்ந்து செம்மையான வையகத்தை உருவாக்கலாம்.
No comments:
Post a Comment