வந்து விட்டு வாளாவிருந்து விட்டு
வெந்ததை தின்றுவிட்டு வெறுமையாய் இருந்துவிட்டு
சோம்பி திரிந்து விட்டு சோகம் என்றிருந்து
சுகத்தை இழந்து விட்டு விரக்தியில் வீழ்ந்து விடாமல்
பிடித்த செயல்புரிந்து உழைப்பை உற்சாகம்கொண்டு
உயர்வாய் மாற்றிகொண்டு மகிழ்ச்சி எழுச்சி கொண்டு
தொடர்ந்து முன்னேறிக்கொண்டு சமுகமுன்னேற்றம்
கண்டு வளமும் நலமும் சேர்த்து
நன்றாய் நாமும் வாழ்வோம்.
No comments:
Post a Comment