ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ,தென்தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் பாபநாசம் போன்ற சிறப்பான மலைப்பகுதிகளுக்கிடையில் கடனாநதி பாயும் இயற்கை சுழலில் ஆழ்வார்குறிச்சி எனும் கிராமத்தில் திரு. அனந்த ராமகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்டு கிராம, ஏழை எளிய மற்றும் நகர்ப்புற மாணவர்களின் வாழ்கை முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிவரும், இருபாலர் பயிலும் அரசு உதவி பெரும் சிறந்த கல்லூரி ஆகும்.
இங்கு அறிவியல் , கலை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளும் சிறப்பாக கற்றுதரப்படுகின்றன.
வேதியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்,வணிகவியல், உயிர் தொழில்நுட்பவியல், கணினி தொழில்நுட்பவியல் போன்ற துறைகள் உள்ளன.
மாணவர்களின் பல்திறனை வளர்க்கும் வகையில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், யூத் ரெட் கிராஸ் , நூலகம், விளையாட்டு என பல அமைப்புகள் இங்கு சிறப்பாக செயல் படுகின்றன.
இந்த கல்லூரி எந்த மாணவனிடமும் தவறாக பீஸ் என்ற பெயரில் பணம் பறிப்பதில்லை. பல ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் படிப்பை தொடர வழிசெய்கிறது.
இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் சிறந்தவர்கள்.
இங்கு படித்த பல மாணவர்கள் இன்று உலகெங்கிலும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.
இங்கு செயல் படும் முன்னாள் மாணவர் அமைப்பு இன்றைய மாணவர்களுக்கு பலவிதத்தில் உதவி செய்து வருகிறது.
தற்போது கல்லூரி முதல்வராக முனைவர் திரு சுந்தரம் அவர்களும், கல்லூரி செயலராக முனைவர் திரு தேவராஜன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்
இங்குள்ள பெரும்பாலான துறைகள் ஆராய்ச்சி நிலையங்களாகவும் செயல்படுகின்றன .எதிர்காலத்தில் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி உலக அரங்கில் சிறந்த கல்வி நிறுவனமாக வளரும் ........
No comments:
Post a Comment